சேதுபதி வரைந்த ஓவியங்கள் II

051. அந்தப்புரப் பெண்களுடன் அரசன் இருக்கும் காட்சி

052. வேட்டையின் போது வேடனும் வேட்டுவச்சிகளும் தோன்றும் காட்சி
053. அரசிக்கு சாமரம் வீசும் மன்னன்
054. அந்தப்புரத்தில் மன்னன் வீணை மீட்டும் காட்சி
055. இரதியும் மன்மதனும் ஒருவர் மீது ஒருவர் மலர் அம்பினை எய்தும் காட்சி
056. அரசனும் அரசியும் ஒருவர் மீது ஒருவர் மலர் அம்பு எய்தும் காட்சி
057.அந்தப்புரத்தில் பெண்களுடன் மன்னன் வீற்றிருக்கும் காட்சி
058. அந்தப்புரத்தில் பெண்களுடன் மன்னன் வீற்றிருக்கும் காட்சி
059. அந்தபுரப் பெண்கள் குடை பிடிக்க மன்னர் நடந்து வரும் காட்சி
060. அந்தபுரப் பெண்களுடன் மன்னர் இருக்கும் காட்சி
061. அந்தபுரப் பெண்களுடன் மன்னர் இருக்கும் காட்சி
062. மன்னர் பெண்களுடன் அந்தப்புரத்தில் இருக்கும் காட்சி
063. அரசன் பெண்களின் நடனத்தைக் காணும் காட்சி
அந்தப்புரத்தில் சேடிப்பெண்கள் மற்றும் நடனப்பெண்ணுடன் மன்னர் இருக்கும் காட்சி
இசை மீட்டும் பெண்களும், ரசிக்கும் மன்னரும்
மன்னர் தர்பாரில் இந்துஸ்தானிய இசைமீட்டுபவரும் அதற்கு ஏற்றார்போல் ஆடும் நடனமங்கையும் தோன்றும் காட்சி
பெண்களின் உருவங்களால் உருவாக்கப்பட்ட யானை மற்றும் குதிரையின் மேல் அமர்ந்து மன்னரும் ராணியும் மலர் கணை வீசும் 
கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையில் நடனம் புரியும் கோபியர்கள்
மன்னனை சந்திக்க பரிசுப் பொருட்களுடன் வரிசையில் நிற்கும் குடிமக்கள்
அரண்மனையில் அரசகுலப் பெண் உட்பட அனைவரும் உணவு சமைக்கும் காட்சி
குயிலுடன் பேசும் கனிமொழியாள்
பாகவத உபதேசம் செய்தல் மற்றும் பிரம்மன் சபையில் பூமாதேவி பசுரூபமாய் வந்து பூமி பாரம் தாங்கவில்லை என்று முறையிடுதல்
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவிடம் சிவன், பிரம்மன், பூமாதேவி மற்றும் தேவர்கள் பூமி பாரம் குறித்து முறையிடுதல்
சிவனும் பிரம்மனும் தேவர்களை அழைத்து, கிருஷ்ணாவதாரம் பற்றிக் கூறி, அவர்களையும் மனிதர்களாய் பிறந்து உதவுமாறு கூறுதல்
தேவேந்திரன் மற்றும் ஏனைய ரிஷிகள் முன்னிலையில் வசுதேவருக்கு தேவகியை உக்கிரசேனன் மணமுடித்து வைக்கும் காட்சி
வசுதேவருக்கும் தேவகிக்கும் பெண்கள், ரதம், யானை, ஆபரணம் முதலானவைகளை உக்கிரசேனன், மனைவி, மகன் கம்சன்(கஞ்சன்) ஆகியோர் சீதனமாக கொடுத்தல்

தேவகியின் எட்டாவது குழந்தை மூலம் கம்சன் கொல்லப்படுவான் என்று அசரீரி ஒலிக்கும் காட்சி
தேவகியை வாளால் வெட்ட முற்படும் கம்சனை தடுத்து நிறுத்தும் வசுதேவர்
வசுதேவர் தமக்கும் தேவகிக்கும் பிறக்கும் குழந்தைகளை கம்சனிடம் ஒப்படைக்க உறுதியளித்தல்
முதல் குழந்தையை வசுதேவர் கம்சனிடம் ஒப்படைத்தல் மற்றும் எட்டாவது குழந்தை மட்டுமே தேவை என்று கம்சன் திரும்ப கொடுக்கும் காட்சி
நாரதர் கூற்றுப்படி தேவகியின் முதல் குழந்தையைக் கொல்ல கம்சன் புறப்படுகையில் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையிலடைத்தல்
வசுதேவர் ஆயர்பாடிக்கு கிருஷ்ணனரைத் தூக்கிச் செல்கையில் வாசுகி குடைப்பிடித்தல், யமுனை நதி வழிவிடுதல் மற்றும் உறங்கும் யசோதையிடத்தில் கிருஷ்ணனை கிடத்துதல் ஆகிய காட்சிகள்
கம்சன், குழந்தை துர்க்கையை வீசுதல் மற்றும் கிருஷ்ணன் ஆயர்பாடியில் இருக்கும் விவரத்தைக் கூறி துர்க்கை மாயமாதல்
குழந்தை பிறந்த செய்தியறிந்து நந்தகோபன் நீராடி விட்டு தானம் செய்து திரும்புதல்
நந்தன் பிராமணர்களுக்கு கோதானம் செய்தல் மற்றும் குடியானவர்கள் நந்தனை சந்திக்க வரும் காட்சி
குழந்தையை நந்தன் காணுதல் மற்றும் குடியானவர்கள் முன் செல்ல பின்னால் ரதத்தில் நந்தன் செல்லும் காட்சி
கிருஷ்ணனுக்கு ஆரத்தி எடுத்து யசோதை பாலூட்டுதல் மற்றும் பேச்சி (பூதகி) இறந்து கிடப்பதை நந்தன் காணுதல்
கிருஷ்ணன், தன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை காலால் உதைத்து வதம் செய்யும் காட்சி
துருணாவத்தன் என்னும் அரக்கன் சூறாவளி காற்றாய் மாறி கிருஷ்ணனை தூக்கி செல்ல, கிருஷ்ணன் அவனை வதம் செய்தல்
வசுதேவர் தங்கள் புரோகிதர் கார்க்கேயரை குழந்தைகளுக்கு பெயர் சூட்ட ஆயர்பாடிக்கு அனுப்புதல் மற்றும் கிருஷ்ணர் பலபத்திர ராமருக்கு பெயர் சூட்டும் காட்சி
தாலாட்டி, நீராட்டி, நந்தனும் யசோதையும் விளையாட்டு காட்டுவதும், மாயரூபமாய் ஊரில் புகுந்த கிருஷ்ணன் தயிரைக் குடித்து விளையாடியதுமான காட்சி
யசோதை மண் தின்ற கிருஷ்ணனின் வாயை திறக்க சொல்ல, தன் வாய் திறந்து பதினாலு லோகமும் காட்டியது மற்றும் தோழர்களுடன் தயிரை திருடியது
கிருஷ்ணன் தன் தோழர்களுடன் கண்பொத்தி, ஊஞ்சல் கட்டி, நடனமாடி விளையாடும் காட்சி
வெண்ணெய் திருடும் கண்ணன்
யசோதை குறும்பு செய்யும் கிருஷ்ணனை உரலில் கயிற்றால் கட்டிப் போடுதல்
நந்தகோபர் தன் மகனுக்கு அரக்கர்களால் வரும் துன்பத்தை தவிர்க்க, தன் மந்திரி உபநந்தனின் ஆலோசனைப்படி பிருந்தாவனம் புறப்பட்டுச் செல்லுதல்

Post a Comment

0 Comments